சாந்தோம் அருகில் பழைய அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து

சாந்தோம் அருகில் பழைய அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்தில் வேலைப்பர்த்துக் கொண்டிருந்த 3 பணியாளர்களும் எந்த காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சாந்தோம் அருகில் பழைய அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து
Published on

சென்னை மயிலாப்பூர் சாந்தோம் நெடுஞ்சாலையில் கண்ணன் (வயது 38) என்பவருக்கு சொந்தமான சிறிய அளவிலான பழைய அடுக்குமாடி கட்டிடம் உள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள ஒரு அறையை திறந்து வைத்து பழுது பார்க்கும் பணியில் 3 பேர் ஈடுபட்டிருந்தனர். மதியவேளையில் திடீரென ஓரிரு செங்கல்கள் பெயர்ந்து தானாக கீழே விழுந்துள்ளது.

இதைக்கண்ட பணியில் ஈடுபட்டிருந்த 3 பேரும் மின்னல் வேகத்தில் வெளியே சிதறி ஓடினர். அவர்கள் ஓடிய சிறிது நொடிகளில் கட்டிடம் இடிந்து கீழே விழுந்து அந்த இடமே புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த சம்பவத்தில் உள்ளே வேலைப்பர்த்துக் கொண்டிருந்த 3 பணியாளர்களும் எந்த காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போக்குவரத்து அதிகமாக காணப்படும் நெடுஞ்சாலை ஓரம் அமைந்திருந்த கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com