உழவர் பாதுகாப்பு திட்டத்தில் நிறுத்தப்பட்ட ஓய்வூதியத்தை மீண்டும் வழங்க வேண்டும்

உழவர் பாதுகாப்பு திட்டத்தில் நிறுத்தப்பட்ட ஓய்வூதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
உழவர் பாதுகாப்பு திட்டத்தில் நிறுத்தப்பட்ட ஓய்வூதியத்தை மீண்டும் வழங்க வேண்டும்
Published on

வேலூர்,

வேலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் ராமன் தலைமையில் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன், பயிற்சி கலெக்டர் ஸ்ரீகாந்த், மாவட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திருகுணஅய்யப்பதுரை, வேளாண் இணை இயக்குனர் வாசுதேவரெட்டி மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

தாலுகா அளவில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடத்தவேண்டும். உழவர் பாதுகாப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியத்தொகையை தற்போது நிறுத்தி விட்டனர். கேட்டால் நிலம் வைத்திருப்பவர்களுக்கு கிடையாது என்கிறார்கள். இந்த திட்டத்தில் புதிதாக சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது என்றும், ஏற்கனவே ஓய்வூதியம் பெற்றவர்களுக்கு மீண்டும் வழங்க வேண்டும் என்றனர்.

அதற்கு பதிலளித்த கலெக்டர் ஏழை விவசாயிகளுக்கு தான் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com