

தானே,
தீயணைப்பு படையினர் தகவல் அறிந்து விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு படை வீரர்களான ஆனந்த் சேலார்(வயது 48), பிராமோத் வாக்சவு(44) ஆகிய இருவர் உள்பட 5 பேர் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்தநிலையில் தீயணைப்பு வீரர்களின் குடும்பத்தினர், போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சென்றதால் தான் இறந்ததாக கூறி தீயணைப்பு துறையை குற்றம் சாட்டினார்கள்.