திருச்சியில் போக்குவரத்துக்கு இடையூறு நடுரோட்டில் புத்தாண்டு கொண்டாடிய இளைஞர்கள் மீது போலீஸ் தடியடி

திருச்சியில் போக்குவரத்துக்கு இடையூறாக நடுரோட்டில் புத்தாண்டு கொண்டாடிய இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சியில் போக்குவரத்துக்கு இடையூறு நடுரோட்டில் புத்தாண்டு கொண்டாடிய இளைஞர்கள் மீது போலீஸ் தடியடி
Published on

மலைக்கோட்டை,

2019-ம் புத்தாண்டை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரவேற்றனர். திருச்சியில் நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இளைஞர்கள் பலர் ஆங்காங்கே கூடி புத்தாண்டு பிறப்பை உற்சாகமாக கொண்டாடினர். வாண வேடிக்கை நடத்தியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வரவேற்றனர். மேலும் சிலர் கேக் வெட்டி கொண்டாடினர்.

காவிரி பாலம், கொள்ளிடம் பாலத்திலும் இளைஞர்கள், பொதுமக்கள் பலர் கூடி புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடினர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் நேற்று முன்தினம் நள்ளிரவு போலீசார் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

புத்தாண்டு கொண்டாட்டம் பெயரில் இளைஞர்கள் பலர் மது அருந்திவிட்டு மோட்டார் சைக்கிளில் வலம் வந்த போது அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். ஒருசிலருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வாகன சோதனை நேற்று அதிகாலை வரை நடந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு காவிரி பாலம் அருகே இளைஞர்கள் பலர் கூடி நின்று புத்தாண்டு பிறப்பை உற்சாகமாக கொண்டாடினர்.

அப்போது திடீரென உற்சாகத்தில் நடுரோட்டில் நின்று ஆடல் பாடலுடன் கொண்டாட தொடங்கினர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து வந்து லேசான தடியடி நடத்தினர். இதனால் இளைஞர்கள் பலர் ஓட்டம் பிடித்தனர். ஒரு சிலரை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பினர். புத்தாண்டு கொண்டாடிய இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com