ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

வடமதுரை அருகே சாலை அமைக்கக் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
Published on

வடமதுரை:

வடமதுரை அருகே உள்ள வேல்வார்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட புதுப்பாளையத்தில் 125 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள காணப்பாடி-வேல்வார்கோட்டை சாலை பிரிவிலிருந்து புதுப்பாளையம் செல்வதற்கு புதிய தார்சாலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. அதில் விடுபட்டிருந்த பகுதியில் சாலை அமைக்கும் பணி தற்போது தொடங்கியது. அப்போது அந்தப் பகுதியில் தனது பட்டா நிலத்தில் சாலை அமைக்கும் பணி நடைபெறுவதாகக்கூறி அந்த நிலத்தின் உரிமையாளர் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த புதுப்பாளையம் ஊர் பொதுமக்கள் நேற்று வடமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவீந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பிரச்சினைக்குரிய இடத்தில் அளவீடு செய்து இதற்கு உரிய தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து ஊர் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com