தொடர் விடுமுறைக்கு பிறகு சென்னை திரும்பிய பொதுமக்கள் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்

தொடர் விடுமுறைக்கு பிறகு சென்னை திரும்பிய பொதுமக்களால் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தொடர் விடுமுறைக்கு பிறகு சென்னை திரும்பிய பொதுமக்கள் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்
Published on

செங்கல்பட்டு,

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் கோயம்பேடு புறநகர் பஸ் நிலையம், தாம்பரம் அறிஞர் அண்ணா பஸ் நிலையம் போன்ற இடங்களில் இருந்து தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்களை இயக்கியது. வண்டலூர் பூங்கா அருகே கிளாம்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலை ஓரம் உள்ள சி.எம்.டி.ஏ.வுக்கு சொந்தமான இடத்தில் புதிதாக புறநகர் பஸ் நிலையம் கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

அந்த இடத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இங்கு நின்று செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு. பொதுமக்கள் அங்கு வந்து பஸ் ஏறி தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

இந்த நிலையில் தென் மாவட்டத்திற்கு சென்றவர்கள் தொடர் விடுமுறைக்கு பின்னர் சென்னை திரும்பியதால் நேற்று காலை முதல் அதிக அளவில் வாகனங்கள் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தன. இதனால் அங்கு கடுமையான போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டது. ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதனால் மகேந்திரா சிட்டி முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரை சர்வீஸ் ரோட்டிலும் வாகனங்கள் வந்தன. இதனால் அந்த பகுதி மக்கள் நடந்து செல்லவே முடியாத அளவுக்கு சிரமத்துக்கு ஆளானார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com