காஞ்சீபுரத்தில் சமூக இடைவெளியை மறந்த பொதுமக்கள்

காஞ்சீபுரத்தில் சமூக இடைவெளியை மறந்த பொதுமக்கள்.
காஞ்சீபுரத்தில் சமூக இடைவெளியை மறந்த பொதுமக்கள்
Published on

காஞ்சீபுரம்,

ஆடிவெள்ளிக்கிழமையான இன்று அம்மனுக்கு உகந்த நாள் ஆகும். ஆடி வெள்ளியையொட்டி அம்மனுக்கு சேலை, பூஜை பொருட்கள் போன்றவற்றை படைப்பர். இவற்றை வாங்குவதற்காக நேற்று காஞ்சீபுரம் காந்திரோட்டில் உள்ள கடைகளில் அதிக அளவில் பொதுமக்கள் குவிந்தனர்.

ஒரே பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததால், காஞ்சீபுரத்தில் நேற்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காந்திரோடு முழுவதும் இருசக்கர வாகனம் மற்றும் கார்கள், ஆட்டோக்கள் நிறைந்து காணப்பட்டன. பொதுமக்கள் சமூக இடைவெளியை மறந்து கூட்டம் கூட்டாக கடைகளில் குவிந்தனர். கொரோனா தொற்று விரைவாக பரவும் சூழ்நிலை உள்ளதால் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com