விழாக்கால சிறப்பு ரெயில்களின் கட்டணத்தை குறைக்க வேண்டும் ரெயில்வே தொழிற்சங்கம் கோரிக்கை

தெற்கு ரெயில்வேயில் இயக்கப்பட்டு வரும் விழாக்கால சிறப்பு ரெயில்களின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என தெற்கு ரெயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யூ) கோரிக்கை வைத்துள்ளது.
விழாக்கால சிறப்பு ரெயில்களின் கட்டணத்தை குறைக்க வேண்டும் ரெயில்வே தொழிற்சங்கம் கோரிக்கை
Published on

சென்னை,

தெற்கு ரெயில்வேயில் இயக்கப்பட்டு வரும் விழாக்கால சிறப்பு ரெயில்களின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என தெற்கு ரெயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யூ) கோரிக்கை வைத்துள்ளது.

இதுகுறித்து எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளரும், அகில இந்திய ரெயில் ஊழியர்கள் சம்மேளனத்தின் தலைவருமான என்.கண்ணையா சென்னையில், நிருபர்களிடம் கூறியதாவது:-

தெற்கு ரெயில்வேயில் கொரோனாவுக்கு பின்னர் 190 ரெயில்கள் வழக்கமான டிக்கெட் கட்டணத்துடன் சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்களில் 169 வகை டிக்கெட் கட்டண சலுகைகளுக்கு பதிலாக 17 வகை சலுகைகளே வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விழாக்காலங்களில் மட்டும் இயக்கப்படும் ரெயில்கள், தற்போது அதிக கட்டணத்தில் சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்டு வருகிறது. இது பயணிகளுக்கு பெரும் சுமையாகும். எனவே பயணிகளின் நலன்கருதி விழாக்கால சிறப்பு ரெயிலின் கட்டணத்தை ரெயில்வே நிர்வாகம் குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com