கிரண்பெடியை பதவிநீக்கம் செய்திருப்பது சந்தர்ப்பவாத செயல் - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

கிரண்பெடியை பதவிநீக்கம் செய்திருப்பது பாஜகவின் சந்தர்ப்பவாத செயல் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
கிரண்பெடியை பதவிநீக்கம் செய்திருப்பது சந்தர்ப்பவாத செயல் - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
Published on

புதுச்சேரி,

டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து கவர்னர் கிரண்பெடி மீது பல்வேறு புகார்களை தெரிவித்து அவரை திரும்ப பெறக் கோரி புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி மனு கொடுத்தார். இதனை தொடர்ந்து கிரண்பெடியை திரும்ப பெற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் புதுச்சேரி காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் பேசிய போது, மாநில வளர்ச்சிக்கு தடையாக இருந்த கிரண்பெடியை நீக்கி இருக்கிறேன் என்று நற்பெயரை வாங்குவதற்காக பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், புதுவை மக்கள் மீது உண்மையிலேயே மோடிக்கு அக்கறை இருந்து இருந்தால் மாநில வளர்ச்சிக்கு கிரண்பெடி தடையாக எப்போது இருந்தாரோ அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், ஒரு அரசை முற்றிலும் செயல் இழக்க செய்துவிட்டு இப்போது அவரை நீக்கி இருப்பது தவறான செயல். இது பா.ஜ.க.வின் ஏமாற்று வேலை. இதனை புதுவை மக்கள் புரிந்து கொள்வார்கள். இவ்வளவு மோசமாக பா.ஜ.க. தன்னை காட்டிக்கொள்ளும் என்று நான் நினைக்கவில்லை. இப்போது கிரண்பெடியை பதவிநீக்கம் செய்திருப்பது சந்தர்ப்பவாத செயல் என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com