நாகை மாவட்ட பாசனம் முடங்கும் அபாயம்: ஓடம்போக்கி ஆற்றை தூர்வார வேண்டும் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

நாகை மாவட்ட பாசனம் முடங்கும் அபாயம் உள்ளதால் ஓடம்போக்கி ஆற்றை தூர்வார வேண்டும் என விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
நாகை மாவட்ட பாசனம் முடங்கும் அபாயம்: ஓடம்போக்கி ஆற்றை தூர்வார வேண்டும் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்
Published on

திருவாரூர்,

திருவாரூரில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நாகை மாவட்ட செயலாளர் ராமதாஸ், மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், அமைப்பு செயலாளர் ஸ்ரீதர், திருவாரூர் மாவட்ட தலைவர் சுப்பையன் ஆகியோர் தூர்வாரப்படாமல் புதர் மண்டி கிடக்கும் ஓடம்போக்கி ஆற்றை பார்வையிட்டனர்.

பின்னர் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவாரூர் நகரத்தை கடந்து செல்லும் ஓடம்போக்கி ஆறு மூலம் நாகை, கீழ்வேளூர் தாலுகாக்களில் பெரும் பகுதி விளை நிலங்களும், திருவாரூர் ஒன்றியத்தில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெற்று வருகிறது.

குப்பைகள்

திருவாரூர் நகரின் மைய பகுதி வழியாக இந்த ஆறு செல்வதால் குப்பைகள் அதிக அளவு இந்த ஆற்றில் தேங்கி உள்ளது. தற்போது ஓடம்போக்கி ஆற்றில் கீழ்வேளூர் வரை புதர்மண்டி பாசனம் பெற முடியாத நிலை உள்ளது. இதனால் நாகை மாவட்ட கடைமடை பகுதியில் பாசனம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஓடம்போக்கிஆற்றை உடனடியாக தூர்வார வேண்டும். காவிரி, வெண்ணாறு பாசன பிரிவுகளில் செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆழ்துளை குழாய் மூலம் குறுவை சாகுபடி மேற்கொண்டுள்ள இடங்களில் நெல் கொள்முதல்

நிலையங்களை திறக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com