அந்தியூர் தவுட்டுப்பாளையத்தில் சுகாதாரமற்ற நீரோடையால் நோய் பரவும் அபாயம்; சுத்தப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

அந்தியூர் தவுட்டுப்பாளையத்தில் சுகாதாரமற்ற நீரோடையால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே அந்த நீரோடையை சுத்தப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அந்தியூர் தவுட்டுப்பாளையத்தில் சுகாதாரமற்ற நீரோடையால் நோய் பரவும் அபாயம்; சுத்தப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
Published on

அந்தியூர்,

அந்தியூர் தவுட்டுப்பாளையத்தில் நீரோடை உள்ளது. வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து சந்தியபாளையம் ஏரி, வேம்பத்தி ஏரி, ஆப்பக்கூடல் ஏரி வழியாக இந்த நீரோடைக்கு தண்ணீர் வருகிறது. மேலும் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் செய்யும் மழை நீரும் இந்த நீரோடை வழியாகத்தான் செல்லும். 10 கிலோ மீட்டர் தூரம் இந்த நீரோடையில் பல்வேறு இடங்களில் புதர்மண்டி கிடப்பதுடன் நாணல்கள் மற்றும் செடிகொடிகள் வளர்ந்து நீரோட்டத்துக்கு தடையாக உள்ளன.

அதுமட்டுமின்றி இந்த நீரோடையில் ஆடு, கோழி இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகளை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கொட்டிவிட்டு சென்றுவிடுகின்றனர். நீரோட்டம் தடை காரணமாகவும், இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதாலும் நீரோடை சுகாதாரமற்று காணப்படுகிறது. மேலும் கொசுக்களின் புகலிடமாகவும் இந்த நீரோடை விளங்குகிறது. இதன்காரணமாக அந்த பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், நீரோடையில் உள்ள நாணல்கள், முட்செடிகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி சுத்தப்படுத்த வேண்டும்.

இதனால் நீர் தங்கு தடையின்றி செல்லும். மேலும் இறைச்சி கழிவுகள் கொட்டுவதையும் தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com