நீதி போதிக்கும் கருவறையாக உருமாறுமா பாடசாலை?

இன்றைய மாணவர்கள் எதிர்கால தூண்கள். மாணவர்களின் வளர்ச்சியில் ஆசிரியர்களுக்கு பெரும் பங்கு உண்டு.
நீதி போதிக்கும் கருவறையாக உருமாறுமா பாடசாலை?
Published on

இன்றைய மாணவர்கள் எதிர்கால தூண்கள். மாணவர்களின் வளர்ச்சியில் ஆசிரியர்களுக்கு பெரும் பங்கு உண்டு. கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்ற பெயரில் மாணவர்களை எப்போதும் படிக்க தூண்டுவது, அடுத்த வருடம் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை இந்த வருடமே அதற்கான பாடங்களை படிக்க வலியுறுத்துவது, வகுப்பறையில் ஆசிரியர்கள் சிலர் மாணவர்கள் மத்தியில் பாரபட்சம் பார்ப்பது, சபிப்பது போன்றவைகளும் மாணவர்களின் மனநிலை மாற்றத்துக்கான காரணிகளாகும். மாணவர்கள், ஆசிரியர்களிடையே மரியாதை கலந்த அன்பான உறவு வேண்டும். மாணவர்கள் செய்யும் தவறுகளை பொறுமையாக, பொது இடத்தில் சொல்லாமல் தனியாக அழைத்து ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்.

பெற்றோர் தங்களது பிள்ளைகள் சந்தோசமாக இருக்க வேண்டும் என்பதற்காக, கஷ்டம் என்றால் என்னவென்று கேட்கும் அளவுக்கு வளர்ப்பதும், கேட்பதையெல்லாம் வாங்கி கொடுப்பதும் தவறுதான். இதற்கு பதிலாக தங்கள் குழந்தைகளுடன் இருப்பதற்கு அதிக நேரத்தை ஒதுக்கவேண்டும். கட்டுப்பாட்டுடன் அவர்களுக்கான சுதந்திரத்தை கொடுக்க வேண்டும். கூடவே இருந்து அவர்கள் படிக்க உதவி புரிய வேண்டும்.

மேலும் வாழ்வியல் பண்பை வளர்க்கும் இடமாகவும், மானுடவியலை போதிக்கும் பாடசாலையாகவும், சகிப்பு தன்மையை கற்றுக்கொடுக்கும் கருவறையாகவும், சூழலியல், சமூகவியல் சார்ந்த தெளிவான பார்வையை இளைய தலைமுறையிடம் கொண்டு செல்லும் உன்னத பணி செய்யும் கோவிலாகவும் வகுப்பறைகள் மாற வேண்டும். வகுப்பறைகளில் நீதி கருத்துகளை போதிக்க வேண்டும். அடிப்படை கல்வியில், உளவியலும் சேர்க்கப்படவேண்டும் என்பதே இன்றைய தேவையாக உள்ளது.

-அ.சேசுராஜ், சின்னாளபட்டி.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com