கவரிங் நகைகளை அடகு வைத்து ஏமாற்றியதாக துணை நடிகை மீது போலீசில் புகார்

போலி நகைககளை அடகு வைத்து பணம் மோசடி செய்ததாக துணை நடிகை மீது எழுந்த புகா தொடாபாக விருகம்பாக்கம் போலீஸா விசாரணை நடத்தி வருகின்றனா.
கவரிங் நகைகளை அடகு வைத்து ஏமாற்றியதாக துணை நடிகை மீது போலீசில் புகார்
Published on

விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம், தசரதபுரம் பகுதியில் அடகு கடை நடத்தி வருபவர் உத்தம் சந்த். இவரது கடைக்கு ஒரு பெண்ணுடன் வந்த ரமேஷ் என்பவர் சில நாட்களுக்கு முன்பு 2 வளையல், சங்கிலி உள்ளிட்டவைகளை அடகு வைத்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணம் பெற்று சென்றுள்ளார். அதன்பிறகு, அடகு கடை உரிமையாளர் உத்தம் சந்த் அந்த நகைகளை வங்கியில் வைக்க சென்ற போது அது கவரிங் நகை என தெரியவந்தது.

இதையடுத்து, அடகு கடை உரிமையாளர் ரமேசை தொடர்பு கொண்டு போலி நகையை கொடுத்து பெற்று சென்ற பணத்தை திருப்பி தருமாறும் கேட்டுள்ளார். அதற்கு ரமேஷ் சினிமாவில் தான் துணை நடிகராக வேலை பார்த்து வருவதாகவும், சினிமாவில் துணை நடிகையாக நடித்து வரும் சலோமியா என்பவருக்கு சொந்தமான அந்த நகைகளை அடகு வைத்த பணத்தை அவர் பெற்று சென்றதாகவும் கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து துணை நடிகர் ரமேஷ் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் துணை நடிகை சலோமியா மீது போலி நகைகளை கொடுத்து மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com