திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயல் பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்தன - அமைச்சர் காமராஜ் பேட்டி

திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயல் பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்தன என அமைச்சர் காமராஜ் கூறினார்.
திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயல் பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்தன - அமைச்சர் காமராஜ் பேட்டி
Published on

திருவாரூர்,

திருவாரூர் புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் அ.தி.மு.க. சார்பில் கிறிஸ்துமஸ் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பங்குத்தந்தை உலகநாதன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் காமராஜ் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி, ஆதரவற்ற குழந்தைகளுக்கு இனிப்புகள், புத்தாடைகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் அமைச்சர் காமராஜ், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புயல் தாக்கியுள்ள நிலையில் திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நிகழ்ச்சியாக இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுவதாக தெரிவித்தார். மேலும் திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயல் பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்தன. நிவாரண பொருட்களை மக்களிடம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது இன்னும் 3, நான்கு நாட்களில் அனைவருக்கும் அரசு அறிவித்த நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு விடும்.

புயலின்போது சேதமடைந்த நெல் கொள்முதல் நிலையங்கள் விரைவில் சீரமைக்கப்படும். நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் கமல்ஹாசன் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் ஆனால் அ.தி.மு.க. பலம் வாய்ந்த கட்சியாக இருக்கிறது நிச்சயம் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் துணைத்தலைவர் ஜார்ஜ், அ.தி.மு.க. நகர செயலாளர் மூர்த்தி, மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், அன்பு, நடராஜன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் கலியபெருமாள், நிர்வாகிகள் பாலாஜி, நடராஜன், ரெயில்பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com