பலத்த சூறைக்காற்று வீசியதில் அரசு பஸ்சின் மேற்கூரை தகரம் பெயர்ந்து விழுந்தது

கரூரில் பலத்த சூறைக்காற்று வீசியதில் அரசு பஸ்சின் மேற்கூரை தகரம் பெயர்ந்து விழுந்தது
பலத்த சூறைக்காற்று வீசியதில் அரசு பஸ்சின் மேற்கூரை தகரம் பெயர்ந்து விழுந்தது
Published on

கரூர்,

கரூரில் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை அதிகமாக இருந்தது. இந்தநிலையில் கடந்த ஓரிரு தினங்களாக சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு, வெயில் குறைவாகவும், காற்று சற்று அதிகமாகவும் வீசுகிறது. நேற்றும் கரூரில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் சாலையில் புழுதி பறந்ததாலும், சாலையோரம் கிடந்த குப்பைகள் காற்றில் பறந்து வந்து விழுந்ததாலும், இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

பலத்த காற்றினால் கரூர் பஸ் நிலையம், திண்ணப்பா கார்னர் ரோடு ஆகிய இடங்களில் போலீசாரால் வைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்புகள் சாலையில் சாய்ந்து விழுந்தன. மேலும் சில கடைகளின் விளம்பர பதாகைகள் தூக்கி வீசப்பட்டன.

பலத்த சூறைக்காற்று வீசும்போது, கரூர் பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலு வலகம் வழியாக வெள்ளியணையை அடுத்த வசந்த கதிர்பாளையத்திற்கு அரசு டவுன் பஸ் ஒன்று நேற்று மதியம் சென்று கொண்டிருந்தது. கரூர்- திண்டுக்கல் சாலையில் மணவாடி அருகே சென்று கொண்டிருந்தபோது, பலத்த சூறைக்காற்றில் பஸ்சின் மேற்கூரை தகரம் பெயர்ந்து விழுந்து தொங்கியது. இதையடுத்து டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். பின்னர் பயணிகள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் பெயர்ந்த தகரம் அகற்றப்பட்டது. தகரம் பெயர்ந்து விழுந்தபோது, அங்கு யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com