ஆழியாறு, சிறுவாணி அணை விவகாரத்தில் தமிழக, கேரள அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண வேண்டும் - வைகோ பேட்டி

ஆழியாறு, சிறுவாணி அணைகளின் விவகாரங்களில் தமிழக, கேரள அரசுகள் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண வேண்டும் என்று வைகோ கூறினார்.
ஆழியாறு, சிறுவாணி அணை விவகாரத்தில் தமிழக, கேரள அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண வேண்டும் - வைகோ பேட்டி
Published on

கோவை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கோவை விமானநிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆழியாறு, சிறுவாணி அணை விவகாரங்களில் தமிழக, கேரள அரசுகள் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண வேண்டும். ஆழியாறு பிரச்சினை தொடர்பாக அரசு கவனமாக கையாள வேண்டும். ஆழியாறு பிரச்சினை இருக்கும் போது, இதை மையமாக வைத்து கேரள அரசு சிறுவாணியில் இருந்து அதிகப்படியான தண்ணீரை கேரளபகுதிக்கு திறந்து விடுவதைக் நிறுத்த வேண்டும். கேரள மாநிலம் அட்டப்பாடியில் ஆதிவாசி மதுவைக் தாக்கி கொன்றவர்கள் மீது முதல்-மந்திரி பினராய் விஜயன் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்.

பிரதமர் நரேந்திரமோடி சர்வாதிகாரி போல செயல்படுகிறார். சங் பரிவார் அமைப்புகளின் ஊதுகுழலாக மோடி செயல்படுகிறார். எல்லா மட்டங்களிலும் இந்தியையும், சமஸ்கிருத மொழியையும் மத்திய அரசு திணிக்கிறது. பன்முக தன்மையைக் எல்லா விதத்திலும் சிதைக்கிறது, 48 ஆண்டுகளில் செய்ய முடியாததை, 48 மாதங்களில் செய்துள்ளதாக மோடி கூறியுள்ளார். ஒரே மொழி, ஒரே கலாசார கொள்கை என்பது இந்தியாவுக்கு பொருந்தாது. அதேபோல் சட்டமன்றத்துக்கும், பாராளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பதும் சரியாக இருக்காது.

அ.தி.மு.க.வை அரசியல் ரீதியாக மட்டும் நாங்கள் எதிர்க்கிறோம். அதேசமயம், முதல்-அமைச்சர் இருக்கிற போது கவர்னர் அரசு விஷயத்தில் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் கவர்னரா? இல்லை இடைத்தரகரா?.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com