பொள்ளாச்சியில் மீண்டும் செயல்பட மாட்டுச்சந்தையை சுத்தப்படுத்தும் பணி

பொள்ளாச்சியில் மீண்டும் செயல்பட மாட்டுச் சந்தையை சுத்தப் படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பொள்ளாச்சியில் மீண்டும் செயல்பட மாட்டுச்சந்தையை சுத்தப்படுத்தும் பணி
Published on

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் மீண்டும் செயல்பட மாட்டுச் சந்தையை சுத்தப் படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மாட்டுச்சந்தை

பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் அருகே 10 ஏக்கர் பரப்பளவில் மாட்டுச்சந்தை வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை களில் செயல்பட்டு வந்தது.

60 ஆண்டுகளுக்கும் மேல் செயல் பட்டு வந்த இந்த சந்தைக்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

அதுபோன்று இந்த மாடுகளை வாங்குவதற்காக ஏராளமான வியாபாரிகளும் வந்தனர். மேலும் இந்த மாட்டுச்சந்தை மிகவும் புகழ்வாய்ந்தது ஆகும்.

ஆனால் இந்த சந்தையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்றும், அதை செய்து கொடுக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்தனர்.

திப்பம்பட்டிக்கு மாற்றம்

ஆனால் அங்கு எவ்வித வசதிகளும் செய்து கொடுக்கப்பட வில்லை. இதையடுத்து வியாபாரிகள் இந்த பகுதிக்கு வருவதை நிறுத்தினார்கள். அதற்கு பதிலாக திப்பம்பட்டிக்கு மாற்றியதுடன், அங்கு சென்று வியாபாரிகள் மாடுகளை வாங்கிச்சென்றனர்.

இதனால் நகராட்சிக்கு வரும் வருவாய் இழந்தது. எனவே ஏற்கனவே நடத்தப்பட்ட இடத்தில் மீண்டும் மாட்டுச்சந்தை நடத்த வேண்டும் என்றும் அங்கு அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் என்றும் பலர் கோரிக்கை விடுத்தனர்.

மீண்டும் இயக்கம்

இந்த நிலையில் நகராட்சி சார்பில் காந்தி மார்க்கெட் அருகே மீண்டும் மாட்டுச்சந்தையை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக அந்தப்பகுதியை பொக்லைன் எந்திரம் மூலம் சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இது தொடர்பாக நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் வெளி யிட்டு உள்ள செய்திக்குறிப்பில், பொள்ளாச்சி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வந்த மாட்டுச்சந்தை மீண்டும் அந்தப்பகுதியிலேயே தொடர்ந்து இயங்க இடம் தயாராக உள்ளது.

எனவே வியாபாரிகள் இங்கு மீண்டும் மாடுகளை கொண்டு வந்து விற்பனை செய்யலாம் என கூறப்பட்டு உள்ளது.

அடிப்படை வசதி

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, பாரம்பரியம் மிக்க பொள்ளாச்சி மாட்டுச்சந்தை மீண்டும் அதே இடத்தில் நடத்த நடவடிக்கை எடுத்து இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே அங்கு வியாபாரிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com