கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, நடந்து வருகிறது.
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Published on

கழுகுமலை,

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் தைப்பூச திருவிழா கொடியேற்றம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறும். முதல் திருநாளான இரவு 8 மணிக்கு சுவாமி வள்ளி தெய்வானையுடன் பூ சப்பரத்தில் வீதி உலா, 2-ம் திருநாள் பூத வாகனத்திலும், 3-ம் திருநாள் அன்ன வாகனத்திலும், 4-ம் திருநாள் வெள்ளி யானை வாகனத்திலும், 5-ம் திருநாள் வெள்ளி மயில் வாகனத்திலும், 6-ம் திருநாள் காலை வாகனத்தில் சோமஸ்கந்தர் மற்றும் ரிஷப வாகனத்தில் அம்பாளும், 7-ம் திருநாள் காலை சண்முகருக்கு சிறப்பு அர்ச்சனையும் நடைபெறும்.

அதனை தொடர்ந்து மாலையில் புஷ்பாஞ்சலி, இரவு 8 மணிக்கு சுவாமி வள்ளி தெய்வானையுடன் வெள்ளி சப்பரத்தில் சிவப்பு மலர் சூடி சிவன் அம்சமாகவும், நள்ளிரவு 12 மணிக்கு வெள்ளை மலர் சூடி பிரம்மன் அம்சமாகவும், மறுநாள் அதிகாலை 5 மணிக்கு பச்சை மலர்சூடி திருமால் அம்சமாகவும் கிரிவலப்பாதை வழியாக வீதி உலா நடைபெறும். 8-ம் திருநாள் இரவு சுவாமி கைலாச பர்வத வாகனத்திலும், 9-ம் திருநாளன்று மயில் வாகனத்திலும் வீதி உலா நடைபெறும்.

தேரோட்டம்

விழாவின் சிகர நிகழ்ச்சியாக 10-ம் திருநாளான 28-ந் தேதி காலை 7 மணிக்கு சுவாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளல் நடைபெறும். அதனை தொடர்ந்து காலை 9 மணிக்கு கோ ரதத்தில் விநாயக பெருமானும், சட்ட ரதத்தில் கழுகாசலமூர்த்தி வள்ளி தெய்வானையுடன் ரத வீதி வழியாக தேரோட்டமும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு இந்திர வாகனத்தில் சுவாமி வள்ளி-தெய்வானையுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com