பேசின் பாலம் பணிமனையில் டொரண்டோ எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது

பேசின் பாலம் பணிமனையில் டொரண்டோ எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது.
பேசின் பாலம் பணிமனையில் டொரண்டோ எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது
Published on

சென்னை,

சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரலில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படுகிறது. அதேபோல், பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் சென்டிரலுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை சென்டிரலுக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், ரெயில் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்ட பின்பு, பராமரிப்பு பணிக்காக பேசின் பாலம் பணிமனைக்கு கொண்டு செல்வது வழக்கம். அந்தவகையில் நேற்று முன்தினம் இரவு டெல்லியில் இருந்து சென்னை வந்த டொரண்டோ எக்ஸ்பிரஸ் ரெயில், பயணிகளை இறக்கிவிட்ட பிறகு பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இரவு 9.45 மணி அளவில், ரெயில் பணிமனையின் உள்ளே சென்று கொண்டிருந்த போது, திடீரென எஸ்-6 பெட்டியின் 4 சக்கரங்கள் தண்டவாளத்தைவிட்டு கீழே இறங்கி தடம் புரண்டது. ரெயில்வே ஊழியர்கள், 3 மணி நேரம் போராடி ரெயில் சக்கரத்தை தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தினர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com