வேலை இல்லாதவர்கள்தான் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வார்கள் : சபாநாயகர் ரமேஷ்குமார் காட்டம்

வேலை இல்லாதவர்கள் தான் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வார்கள் என்று சபாநாயகர் ரமேஷ்குமார் காட்டமாக கூறினார்.
வேலை இல்லாதவர்கள்தான் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வார்கள் : சபாநாயகர் ரமேஷ்குமார் காட்டம்
Published on

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை சபாநாயகர் ரமேஷ்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர் களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள், பதவியை ராஜினாமா செய்வது சரியல்ல. எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்கிறார்கள் என்ற செய்தி வெறும் வதந்தி. எம்.எல்.ஏ.க்கள் யாராவது வந்து ராஜினாமா கடிதம் கொடுப்பார்கள் என்பதற்காகவே நான், 100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள எனது வீட்டில் இருந்து தினமும் பெங்களூரு வந்து எனது அலுவலகத்தில் உட்கார்ந்திருக்கிறேன்.

ஆனால் யாரும் ராஜினாமா கொடுக்க வரவில்லை. எம்.எல்.ஏ.க்கள் யாரும் வந்து என்னை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கேட்கவில்லை. பத்திரிகையாளர்கள் தான் வந்து என்னிடம் நேரம் ஒதுக்க கேட்கிறார்கள். வணிகர்கள் வியாபாரம் செய்கிறார்கள். அரசியலில் வியாபாரம் செய்யக்கூடாது.

வேலை இல்லாதவர்கள் தான், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வார்கள். ராஜினாமா செய்வதாக கூறி வழி தவறி செல்பவர்களை என்னிடம் அழைத்து வாருங்கள். அவர்களுக்கு அறிவுரை சொல்லி அனுப்பி வைக்கிறேன். ஆபரேஷன் தாமரை தொடர்பாக சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

அது என்ன ஆனது என்று எனக்கு தெரியவில்லை. நான் சபாநாயகர். எனக்கு சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இதுபற்றி நான் வெளிப்படையாக பேசுவது சரியாக இருக்காது. அந்த சுதந்திரமும் எனக்கு இல்லை. இதுபற்றி சரியான இடத்தில் பேசுவேன்.

இவ்வாறு ரமேஷ்குமார் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com