குழாயில் ஏற்பட்ட நீர்க்கசிவு சரிசெய்யப்படாததால் இரவில் வீணாக சாலையில் வெளியேறும் குடிநீர் பொதுமக்கள் புகார்

குழாயில் ஏற்பட்ட நீர்க்கசிவு சரிசெய்யப்படாததால் இரவில் வீணாக சாலையில் குடிநீர் வெளியேறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
குழாயில் ஏற்பட்ட நீர்க்கசிவு சரிசெய்யப்படாததால் இரவில் வீணாக சாலையில் வெளியேறும் குடிநீர் பொதுமக்கள் புகார்
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது ஜிக்கா குடிநீர் திட்டம் மூலம் குழாய்கள் பதிக்கும் பணி நடக்கிறது. ஜிக்கா திட்டத்தின் கீழ் பதிக்கப்படும் குழாய்களில் பிரத்யேக கருவி இணைக்கப்பட்டிருக்கும். இந்த கருவி, மின்மோட்டார் மூலம் யாரேனும் குடிநீரை எடுத்தால் அவர்களுக்கான இணைப்பை தற்காலிகமாக துண்டித்துவிடும். இந்த நிலையில் திண்டுக்கல் மெங்கில்ஸ் ரோடு பகுதியில் இந்த திட்டத்தின் கீழ் பதிக்கப்பட்ட பிரதான குழாயில் இருந்து மென்டோன்சா காலனி, போடிநாயக்கன்பட்டி, திருமலைசாமிபுரம், சுக்காமேடு ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக புதிதாக இணைப்பு கொடுக்கப்பட்டது.

ஆனால் இணைப்பு கொடுக் கப்பட்ட பிறகும் அப்பகுதிகளுக்கு குடிநீர் சரியாக வரவில்லை என அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பிரதான குழாய் அமைந்துள்ள இடத்தில் சுமார் 5 அடி பள்ளம் தோண்டி குழாய் சீரமைப்பு பணி மேற்கொண்டனர். ஆனால் அப்போதும் தண்ணீர் வரவில்லை. இதையடுத்து ஊழியர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். பள்ளமும் மூடப்படவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com