கொள்ளிட ஆற்றில் வந்த தண்ணீரை நீராதார பாதுகாப்பு குழுவினர் மலர்தூவி வரவேற்பு

திருமானூர் கொள்ளிட ஆற்றில் வந்த தண்ணீரை நீராதார பாதுகாப்பு குழுவினர் மலர்தூவி வரவேற்பு.
கொள்ளிட ஆற்றில் வந்த தண்ணீரை நீராதார பாதுகாப்பு குழுவினர் மலர்தூவி வரவேற்பு
Published on

திருமானூர்,

கர்நாடகத்தின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் அதிகபடியான மழை காரணமாக கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பியதால், அங்கிருந்து உபரிநீராக சுமார் 80 ஆயிரம் கனஅடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இந்நிலையில், மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் தற்போது, அதே 80 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் கடந்த ஞாயிறு அன்று 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து நாளுக்கு நாள் திறந்து விடப் படும் தண்ணீரின் அளவு அதிகரித்துக்கொண்டே உள்ளது. இந்நிலையில், கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீரானது, திருமானூருக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு வந்தடைந்தது. இதனையடுத்து, திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் கொள்ளிட நீராதார பாதுகாப்பு குழு சார்பில், நேற்று காலை தண்ணீரை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், மலர்களையும், விதை நெல்மணிகளையும் தூவி அனைவரும் வரவேற்று வழிபட்டனர். இதில், கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழுவினர்கள் தனபால், ராஜேந்திரன், கைலாசம், வடிவேல் முருகன், ஆறுமுகம், பாளை.திருநாவுக்கரசு, கற்பகம், தங்க சண்முகசுந்தரம் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com