செங்குன்றத்தில் இளம்பெண்ணை கத்திமுனையில் கடத்திய மர்ம கும்பல் போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு

செங்குன்றம் அருகே இளம்பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று கடத்திச் சென்றது. இதையடுத்து, போலீசார் அந்த பெண்ணை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
செங்குன்றத்தில் இளம்பெண்ணை கத்திமுனையில் கடத்திய மர்ம கும்பல் போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு
Published on

செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட அன்னை இந்திரா நினைவு நகரைச் சேர்ந்தவர் சகாயமேரி (வயது 22). இவர் அங்குஉள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் உள்ள பழைய விமானத்தளம் அருகே ஆட்டோவில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் சகாயமேரியை வழிமறித்து, திடீரென்று செல்போன் மற்றும் பணத்தை பறித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த சகாயமேரி கூச்சல் போட்டதால், ஆத்திரமடைந்த அந்த கும்பல் சகாயமேரியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவரை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்றுவிட்டனர்.

அப்போது, அவர்கள் செல்லும் வழியில் அந்த வழியாக வந்த வந்த குணா (21) என்ற வாலிபரையும் தாக்கி அவரிடமிருந்த செல்போனையும் பறித்து சென்றனர். இதையடுத்து செல்போனை பறிகொடுத்த குணா, இளம்பெண் ஒருவரை அந்த கும்பல் கடத்திச் சென்றதை பார்த்ததும், உடனே சோழவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையிலான போலீசார், இளம்பெண்ணை மீட்பதற்கு களத்தில் இறங்கினர். சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலுமணி மற்றும் குமணன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

போலீசார் தங்களை தேடுவதை அறிந்த அந்த கும்பல் மீஞ்சூர்-வண்டலூர் புறவழிச்சாலையில் அமைந்துள்ள காட்டூர் அருகே இளம்பெண்ணை இறக்கிவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர். பின்னர், போலீசார் அந்த இளம்பெண்ணை மீட்டு, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இதுதொடர்பாக சோழவரம் போலீசார் கடத்தலில் ஈடுபட்ட மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவி, பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com