மோடி அரசின் திட்டத்தால் எந்த பயனும் இல்லை - பிரிதிவிராஜ் சவான் தாக்கு

மோடி அரசின் திட்டத்தால் சாதாரண மக்களுக்கு எந்த பயனும் இல்லை என பிரிதிவிராஜ் சவான் தாக்கி பேசியுள்ளார்.
மோடி அரசின் திட்டத்தால் எந்த பயனும் இல்லை - பிரிதிவிராஜ் சவான் தாக்கு
Published on

நாசிக்,

மத்திய, மாநில பா.ஜனதா அரசுகள் மும்பை- குஜராத் இடையே புல்லட் ரெயில் திட்டத்தை தொடங்குவது, மும்பையில்- நாக்பூர் இடையே 700 கிலோமீட்டர் தொலைவுக்கு சம்ருதி காரிடார் எனப்படும் நெடுஞ் சாலையை அமைப்பது போன்ற திட்டங்களில் முனைப்பு காட்டி வருகிறது.

இந்த நிலையில் முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பிரிதிவிராஜ் சவான் இதுகுறித்து நாசிக்கில் நேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதா அரசு மத்தியிலும், மாநிலத்திலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தோல்வி அடைந்து விட்டது. இதே போல விவசாயிகளின் நிலைமையும் மிகவும் மோசமாக உள்ளது. துயரம் தாங்க முடியாமல் அவர்கள் தற்கொலை செய்துகொள் ளும் நிலை தொடருகிறது.

புல்லட் ரெயிலின் கட்டணம் சாதாரண மக்க ளுக்கு எட்டாக்கனி யாகவே இருக்கப்போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதேபோல் சம்ருதி காரி டார் சாலையை பயன்படுத் தவும் அதிகப்படியான சுங்க கட்டணம் செலுத்தவேண்டி இருக்கும். இதுபோன்ற திட்டங்களால் சாதாரண மக்களுக்கு எந்த பயனும் இல்லை.

கடந்த ஆண்டு அரசு அறிவித்த பயிர்க்கடன் தள்ளுபடி இன்றளவும் பெரும்பாலான விவசாயி களுக்கு சென்று சேரவில்லை. காரணம் கடன் தள்ளுபடி பெறுவதற்கான நடைமுறை மிகவும் கடினமானதாக உள்ளது. இதற்காக இணைய தளத்தில் கிட்டத்தட்ட 66 பத்திகளை பூர்த்திசெய்ய வேண்டியுள்ளது.

இவ்வாறு பிரிதிவிராஜ் சவான் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com