

விருதுநகர்,
திருச்சுழி தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ராஜசேகர் நரிக்குடி ஒன்றியம் வேலங்குடி, சாத்தசேரி, வேளானேரி, முள்ளிக்குடி, ஆண்டியேந்தல், மானூர், உலக்குடி, திருமாணிக் கனேந்தல், சாலை இலுப்பைகுளம் உள்பட 50-க்கு மேற்பட்ட கிராமங்களில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார். அப்போது அதிமுக கூட்டணி வேட்பாளர் ராஜசேகர் பேசியதாவது.
திருச்சுழி தொகுதி மிகவும் பின்தங்கிய தொகுதி யாகவும் இந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் விவசாயத்தையே நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்த தொகுதியில் நான் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக ஆனவுடன் திருச்சுழி தொகுதியில் உள்ள காரியா பட்டி நரிக்குடி திருச்சுழி ஆகிய மூன்று ஒன்றியங் களிலும் சட்டமன்ற உறுப் பினர் அலுவலகம் திறக்கப் பட்டு பொது மக்களின் கோரிக்கைகளை பெற்று உடனுக் குடன் நடவடிக்கை எடுக்கப் படும் என்று தெரிவித்தார். அதிமுக அரசு தேர்தல் அறிக்கையில் குடும்பப்பெண்களுக்கு ரூபாய் 1500 இலவச வாஷிங்மெஷின் 6 சிலிண்டர் இலவசம் உள் ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் அறிவிக்கப்பட் டதில் இருந்தே அதிமுக அரசுக்கு பொதுமக் களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது.
மேலும் இந்த ஆண்டு தொடர்ந்து பெய்த மழையால் விவசாயம் முழுவதும் முற்றிலும் பாதிக் கப்பட்டு இருந்ததை அறிந்து நமது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விவசாய பயிர்கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது. மற்றும் நகைக் கடைகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது போன்ற எண்ணற்ற திட்டங் களை அதிமுக அரசு செய்துள் ளது. பல ஆண்டுகளாக கிருதுமால் நதி தூர்வாரப் படாமல் இருந்து வந்தது இதை கிருதுமால் பாசன விவசாயிகள் கிருதுமால் நதி தூர்வார படவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதனடிப்படையில் அப்போ திருந்த முதலமைச்சர் ஜெய லலிதா அவர்கள் விவ சாயிகளின் கோரிக்கையை ஏற்று 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து கிருதுமால் நதி முழுவதும் தூர்வாரப் பட்டது.இந்த ஆண்டு கிருது மால் நதியில் தண்ணீர் திறக்கப்பட்டு நரிக்குடி பகுதியில் உள்ள அனைத்து கண்மாய்களும் நிரப்பப் பட்டன. இதனால் இந்த பகுதியில் விவசாயம் செழிக்க பட்டது விவசாயிகளை பாது காக்கும் அரசாக அதிமுக அரசு இருந்து வருகிறது .எனவே இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய் யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார். விருதுநகர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பிரபாத் வர்மன்,நரிக்குடி ஒன்றிய செயலாளர்கள் அம்மன்பட்டி ரவிச்சந்திரன், நாலூர் பூமி நாதன், முன்னாள் ஒன்றிய செயலாளர் அம்பலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.