திருக்கோவிலூர்: ரூ.3½ கோடியில் சாலை அமைக்கும் பணி - குமரகுரு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

திருக்கோவிலூர் அருகே ரூ.3½ கோடியில் சாலை அமைக்கும் பணியை குமரகுரு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
திருக்கோவிலூர்: ரூ.3½ கோடியில் சாலை அமைக்கும் பணி - குமரகுரு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
Published on

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே செங்கனாங்கொல்லை கிராமத்தில் இருந்து சோழபாண்டியபுரம், பனப்பாடி, கொணக்கலவாடி வழியாக தத்தனூர் செல்லும் வகையில் சாலை உள்ளது. இந்த சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில், குண்டும் குழியுமாக இருந்தது. எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, இந்த பகுதியில் புதிதாக சாலை அமைக்க ரூ. 3 கோடியே 63 லட்சத்தை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த சாலை, அமைக்கும் பணி பூமிபூஜையுடன் தொடங்கியது. இதற்கென செங்கனாங்கொல்லை கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு திருக்கோவிலூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஏ.பி.பழனி தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி எம்.பி. காமராஜ், மணம்பூண்டி ஒன்றிய செயலாளர் எஸ்.பழனிசாமி, நகர செயலாளர் சுப்பு, கூட்டுறவு சங்க தலைவர்கள் என்.துரைராஜ், தேவியகரம் என்.சேகர், காடகனூர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜி.அரியூர் கூட்டுறவு சங்க தலைவர் கலையழகன் வரவேற்றார்.

இதில், விழுப்புரம் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆர்.குமரகுரு எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் சாலை பணி தொடங்கியது.

இதில், கூட்டுறவு சங்க தலைவர்கள் துறிஞ்சிப்பட்டு முருகன், மிலாரிப்பட்டு பரசுராமன், அருதங்குடி இளங்கோவன், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் சி.ஆர்.சம்பத், என்.ஜெயபாலன், ஜி.ரகோத்துமன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கே.ஏசுபாதம், ஊராட்சி செயலாளர் என்.அருணகிரி, முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் கண்ணன், நகர பொருளாளர் ஆதம்ஷபி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் அவைத்தலைவர் தங்கராசு நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com