திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
Published on

திருவள்ளூரை அடுத்த திருமழிசையில் மிகவும் பழமை வாய்ந்த குளிர்ந்த நாயகி சமேத ஒத்தாண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா 25 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கோவில் மறுசீரமைக்கப்பட்டு கோபுரங்கள் வர்ணம் தீட்டி கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கான விழா கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி அன்று கோபூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா நேற்று காலை 10 மணி அளவில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் துரைராஜ் செங்குந்தர், ராமமூர்த்தி செங்குந்தர், சிவானந்தம் செங்குந்தர், பழனிச்சாமி சம்பந்தர் மற்றும் செங்குந்தர் மகாசபை உத்தரவுப்படி திருக்குடமுழக்கு நன்னீராட்டு திருவிழா குழு தலைவர்கள் சண்முகம் செங்குந்தர், கதிர்வேலு செங்குந்தர், உமாசங்கர் செங்குந்தர் மற்றும் உறுப்பினர்கள் விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் பால்வளத்துறை அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான ஆவடி சா.மு.நாசர், பூந்தமல்லி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி, பூந்தமல்லி ஒன்றியக்குழு தலைவர் ஜெயக்குமார், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் தேசிங்கு, ஒன்றியக்குழு துணைத்தலைவர் பரமேஸ்வரி கந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com