திருமுருகன்பூண்டி பேரூராட்சி: டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி - கலெக்டர் ஆய்வு

திருமுருகன்பூண்டி பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
திருமுருகன்பூண்டி பேரூராட்சி: டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி - கலெக்டர் ஆய்வு
Published on

அனுப்பர்பாளையம்,

திருமுருகன்பூண்டி பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக 10-வது வார்டு பாரதிநகரில் ஒருங்கிணைந்த துப்புரவு பணி மற்றும் வடிகால்கள் சுத்தம் செய்யும் பணி நடந்தது. மேலும் டெங்கு கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்பட்டதுடன், புகை மருந்தும் அடிக்கப்பட்டது. அத்துடன் பேரூராட்சி சுகாதார பணியாளர்கள் 9 குழுக்களாக பிரிந்து வீடு, வீடாக சென்று அபேட் மருந்து தெளித்தனர். இந்த பணியை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் மனோகரன், உதவிபொறியாளர் பழனிசாமி மற்றும் இளநிலை உதவியாளர் செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com