திருநின்றவூர் பகுதியில் சாலைகளில் சுற்றி திரியும் பன்றிகளால் தொற்றுநோய் பரவும் அபாயம்

திருநின்றவூர் பகுதியில் சாலைகளில் சுற்றி திரியும் பன்றிகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருநின்றவூர் பகுதியில் சாலைகளில் சுற்றி திரியும் பன்றிகளால் தொற்றுநோய் பரவும் அபாயம்
Published on

ஆவடி,

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. சுதேசி நகர், முத்தமிழ் நகர், ராமதாசபுரம், திருவேங்கட நகர், கோமதிபுரம், பெரியார் நகர், பிரகாஷ் நகர், வடக்கு பிரகாஷ் நகர், அந்தோணி நகர், தாசர்புரம், முருகேசன் நகர், லட்சுமிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனை உள்ளிட்டவை அமைந்துள்ளன. ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் இங்கு உள்ளன. இந்த பகுதிகளில் முறையாக கொசுமருந்து, பிளச்சிங் பவுடர் போன்றவற்றை திருநின்றவூர் பேரூராட்சி ஊழியர்கள் தெளிப்பதில்லை.

இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக திருநின்றவூர் ரெயில் நிலையத்தை ஒட்டியுள்ள சுதேசி நகர், திருவேங்கட நகர், ராமநாதபுரம், கன்னிகாபுரம், முத்தமிழ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தெருக்களில் ஆங்காங்கே பன்றிகள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன.

மேலும் தெருக்களில் தேங்கி நிற்கும் கழிவுநீர், வீடுகளின் ஓரம் தேங்கி நிற்கும் கழிவு நீரில் விழுந்து புரளுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீரில் சுற்றித்திரியும் பன்றிகள் வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. பன்றிகள் சுற்றுச்சுவர் இல்லாத வீடுகளுக்குள் புகுந்து செடிகள் மற்றும் வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்துகின்றன. சில நேரங்களில் அவர்கள் உணவு பொருட்களை விட்டு வைப்பதில்லை.

சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரியும் பன்றிகளால் பொதுமக்கள் பல்வேறு வகையில் அவதிக்குள்ளாகின்றனர்.

மேலும் திருநின்றவூர் பேரூராட்சி செயல் அலுவலரிடம் பொதுமக்கள் பலமுறை புகார் செய்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com