திருப்போரூர் தாசில்தார் அலுவலகத்தில் லஞ்சம் பொதுமக்கள் குற்றச்சாட்டு

திருப்போரூர் தாசில்தார் அலுவலகத்தில் லஞ்சம் தலை விரித்தாடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
திருப்போரூர் தாசில்தார் அலுவலகத்தில் லஞ்சம் பொதுமக்கள் குற்றச்சாட்டு
Published on

திருப்போரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் தாலுகாவில் 86 கூட்டுறவு கடைகள் உள்ளன. அந்தந்த கடைகளில் உள்ள இருப்பு பொருட்களை மற்றும் ரேஷன்கடைக்கு தேவையான பொருட்கள் உள்ளிட்டவை தாசில்தார் அலுவலகத்தில் உள்ள உணவு துறை அதிகாரிடம் தெரிவிக்கவேண்டும்.

திருப்போரூர் தாலுகாவில் உணவு துறையில் பணிபுரியும் ராஜா என்பவர் ரேஷன் கடைகளில் தேவைப்படும் பொருட்களை வாங்க வருபவர்களிடம் ரூ.500 லஞ்சம் வாங்கி கொண்டு கணக்குகளை எழுதியுள்ளதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாளடைவில் லஞ்சப்பணம் வாங்குவதற்காகவே ஒருவரை நியமித்துள்ளார்.

உணவு துறை அதிகாரி ராஜா இருக்கவேண்டிய இடத்தில் மற்றொருவர் இருப்பதை கண்ட ரேஷன் கடை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர் பணிக்கு வராமலேயே சம்பளம் வாங்கிக்கொண்டு லஞ்சம் வாங்குவதற்கென்றே ஒருவரை நியமித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது சம்பந்தமாக மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாசில்தார் அலுவலகத்தில் லஞ்சம் தலை விரித்தாடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com