சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தடுப்பூசி செலுத்த வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் வலியுறுத்தியுள்ளார்.

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தடுப்பூசி செலுத்த வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் வலியுறுத்தியுள்ளார்.
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தடுப்பூசி செலுத்த வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் வலியுறுத்தியுள்ளார்.
Published on

திருப்பூர்

திருப்பூரில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தடுப்பூசி செலுத்த வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி வலியுறுத்தியுள்ளார்.

சிக்கண்ணா அரசு கல்லூரி

திருப்பூர் மாநகர பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் நேற்று திருப்பூர் மாநகரில் 17 இடங்களில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுபோல் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதனை மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி, கல்லூரி முதல்வர் கிருஷ்ணன், மாநகர் நல அதிகாரி பிரதீப் வாசுதேவ் கிருஷ்ணகுமார் ஆகியோர் தொடங்கிவைத்தனர். இதில் துணை கமிஷனர் சுப்பிரமணியன், டாக்டர்கள் கலைசெல்வன், இளஞ்செழியன், சுகாதார அலுவலர் முருகன், ஆய்வாளர் கலைசெல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதுபோல் குமரன் மகளிர் கல்லூரியிலும் மாணவிகளுக்கு தடுப்பூசி முகாம் நடந்தது. மேலும், திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமும் நடைபெற்றது.

சிறு, குறு நிறுவன தொழிலாளர்கள்

தடுப்பூசி முகாம்களை ஆய்வு செய்த மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி கூறியதாவது:-

மாநகராட்சி பகுதியில் தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாளுக்கு நாள் அதிகளவில் முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி அனைவரும் செலுத்த வேண்டும்.

திருப்பூரில் சிறு, குறு மற்றும் நடுத்தர பனியன் நிறுவனங்கள் ஏராளமானவை செயல்பட்டு வருகின்றன. தொழிலாளர்களுக்காக ஏற்படுத்தப்படும் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி நிறுவன உரிமையாளர்கள் தங்களது நிறுவன தொழிலாளர்களை அழைத்து வந்து தடுப்பூசி செலுத்தி செல்ல வேண்டும். தொழிலாளர்களும் தடுப்பூசி செலுத்த வர வேண்டும். திருப்பூரில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com