திருத்தணி முருகன் கோவில் உண்டியல் வசூல் ரூ.86 லட்சம் 14 நாட்களில் கிடைத்தது

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா 10 நாட்கள் நடைபெற்றது.
திருத்தணி முருகன் கோவில் உண்டியல் வசூல் ரூ.86 லட்சம் 14 நாட்களில் கிடைத்தது
Published on

பள்ளிப்பட்டு,

விழாவில் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கடந்த 14 நாட்களில் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி கோவில் வளாகத்தில் உள்ள தேவர் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கோவில் தக்கார் ஜெயசங்கர், இணை ஆணையரும், செயல் அலுவலருமான பரஞ்சோதி, உதவி ஆணையர் ரமணி, ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்மசாமி கோவில் உதவி ஆணையர் ஜெயா ஆகியோர் முன்னிலையில் கோவில் உண்டியலில் வசூலான காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் கடந்த 14 நாட்களில் கோவில் உண்டியல் மூலம் ரூ.86 லட்சத்து 5 ஆயிரத்து 315 மற்றும் 700 கிராம் தங்கம், 3 கிலோ 550 கிராம் வெள்ளி கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com