திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் ஆருத்ரா தரிசன விழா

திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சாமி கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் திருவாதிரை நாளில் ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக நடப்பது வழக்கம்.
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் ஆருத்ரா தரிசன விழா
Published on

அதன்படி நேற்று மாலை விழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து இரவு 9 மணியளவில், ரத்தின சபாபதி பெருமான் பழை ஆருத்ரா அபிஷேக மண்டபத்தில் விபூதி அபிஷேகத்துடன் எழுந்தருளினார்.

பின்னர், நடராஜருக்கு, 33 வகையான அபிஷேகங்கள் அதிகாலை வரை நடத்தப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்களை அமர்ந்து தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் அனுமதிக்கவில்லை. பக்தர்கள் வரிசையில் நின்று சாமியை தரிசித்துவிட்டு உடனடியாக அங்கிருந்து வெளியேறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளை இணை ஆணையர் பரஞ்ஜோதி, தக்கார் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com