திருவள்ளூர் மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதி - வங்கி கணக்கு எண்ணை செலுத்த கலெக்டர் அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்ட அமைப்பு சாரா தொழி லாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்க, வங்கி கணக்கு எண்ணை நலவாரிய அலுவலகத்தில் அளிக்காத தொழிலாளர் கள் உடனடியாக அளிக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதி - வங்கி கணக்கு எண்ணை செலுத்த கலெக்டர் அறிவிப்பு
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா டிரைவர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிடும் வகையில் கொரோனா தடுப்பு சிறப்பு நிவாரண உதவித்தொகையாக ரூ.1000 வீதம் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் மற்றும் அமைப்புசாரா டிரைவர்கள் நலவாரியத்தில் பதிவுபெற்ற வங்கி கணக்கு எண் மற்றும் தொலைபேசி எண் ஆகிய விவரங்களை நலவாரிய அலுவலகத்தில் அளிக்காத தொழிலாளர்கள் உடனடியாக அளிக்க வேண்டும்.

அதில் தங்களது பெயர், தொலைபேசி எண், வங்கி கணக்கு எண் மற்றும் நலவாரிய பதிவு எண் ஆகியவற் றினை திருவள்ளுர் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் வாட்ஸ்-அப் நம்பர்-9382976564 அல்லது மின்னஞ்சல் முகவரி lossst-lr@gm-a-il.com அல்லது டி.பொன்னேரி உதவி ஆணையர், அலுவலகம் வாட்ஸ்-அப் நம்பர்-9626194761 அல்லது மின்னஞ்சல் முகவரி losss-p-o-n-n-e-ri@gm-a-il.com மூலமாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இதுதொடர்பாக உறுப்பினர்கள் யாரும் தொழிலாளர் நல வாரிய அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com