திருவண்ணாமலை, செய்யாறு கல்வி மாவட்டங்கள் 5 ஆக பிரிப்பு - முதன்மை கல்வி அலுவலர் தகவல்

திருவண்ணாமலை, செய்யாறு கல்வி மாவட்டங்கள் 5 ஆக பிரிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் கூறினார்.
திருவண்ணாமலை, செய்யாறு கல்வி மாவட்டங்கள் 5 ஆக பிரிப்பு - முதன்மை கல்வி அலுவலர் தகவல்
Published on

செய்யாறு,

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை மற்றும் செய்யாறு கல்வி மாவட்டங்கள் செயல்பட்டு வந்தன. இந்த நிலையில் நேற்று முதல் மாவட்டத்தில் கல்வி வளர்ச்சிக்காக பள்ளிக்கல்வித்துறை புதிதாக 3 கல்வி மாவட்டங்களை உருவாக்கி தற்போது 5 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

2018-2019-ம் கல்வி ஆண்டு கோடை விடுமுறை முடிந்து இன்று (நேற்று) பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர். பள்ளி திறந்த முதல் நாளில் மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா புத்தகங்கள் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.

இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் கூறியதாவது:-

திருவண்ணாமலை, செய்யாறு, ஆரணி, போளூர், செங்கம் என 5 கல்வி மாவட்டகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, மெட்ரிக்பள்ளி, சி.பி.எஸ்.இ., தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என 2 ஆயிரத்து 522 பள்ளிகள் செயல்படுகிறது. இந்த பள்ளிகளில் 4 லட்சத்து 5 ஆயிரத்து 570 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

பள்ளியின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், கல்வி வளர்ச்சிக்காகவும் வெம்பாக்கம், செய்யாறு, அனக்காவூர் வந்தவாசி ஆகிய ஒன்றியங்கள் செய்யாறு கல்வி மாவட்டமாகவும், பெரமணல்லூர், ஆரணி, தெள்ளாறு, மேற்கு ஆரணி ஆகிய ஒன்றியங்கள் ஆரணி கல்வி மாவட்டமாகவும், போளூர், கலசபாக்கம், சேத்துப்பட்டு, ஜவ்வாதுமலை ஆகிய ஒன்றியங்கள் போளூர் கல்வி மாவட்டமாகவும், திருவண்ணாமலை, துரிஞ்சாபுரம், கீழ்பென்னாத்தூர் ஆகிய ஒன்றியங்கள் திருவண்ணாமலை கல்வி மாவட்டமாகவும், செங்கம், புதுப்பாளையம், தண்டராம்பட்டு ஆகிய ஒன்றியங்கள் செங்கம் கல்வி மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

2018 - 2019-ம் கல்வி ஆண்டில் அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீத அடிப்படையில் முதன்மை இடத்தினை திருவண்ணாமலை மாவட்டம் பெற தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com