திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இன்று(சனிக்கிழமை) பள்ளிளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
Published on

திருவாரூர்,

தென்மேற்கு வங்கக்கடலில் வளி மண்டல சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இந்தநிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக இடைவிடாமல் மழை பெய்து வருகிறது.

நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாயினர். மழை தொடர்ந்து பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் திருவாரூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-

திருத்துறைப்பூண்டி-52, குடவாசல்-48, திருவாரூர்-46, நீடாமங்கலம்-38, நன்னிலம்-35, மன்னார்குடி-30, பாண்டவையாறு தலைப்பு-29, வலங்கைமான்-23, முத்துப்பேட்டை-13 மழை அளவு பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டியில் 52 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்வதால் இன்று (சனிக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனை தனியார் பள்ளிகளும் கடைபிடிக்க வேண்டும். எந்தவித வகுப்புகளும் நடத்த கூடாது. இதனை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com