திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர்

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம என்று கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர்
Published on

மணிமேகலை விருது

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறயிருப்பதாவது:-

2021-22-ம் ஆண்டுக்கான மணிமேகலை விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு, நகர அளவிலான கூட்டமைப்பு ஆகிய சமூக அமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்குவதற்கான அறிவிப்பின்படி ரூ.2 கோடியே 8 லட்சம் ஒதுக்கீடு செய்து வெளியிட்டார்.

விண்ணப்பங்கள் வரவேற்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவி குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு, நகர அளவிலான கூட்டமைப்பு போன்றவை விருதுக்காக தேர்வு செய்யும் செய்முறைகளுக்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணையில் வழங்கப்பட்டுள்ளது.

எனவே 2021-2022-ம் ஆண்டுக்கான விருதுக்கு தகுதியான மேற்கண்ட சமுதாய அமைப்புகளிடமிருந்து வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சமுதாய அமைப்புகளின் தொடர்ச்சியான கூட்ட நடவடிக்கைகள், நிதி பயன்பாடு மற்றும் சேமிப்பு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பெருங்கடன், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் வாழ்வாதார தொழில் நடவடிக்கைகள் மற்றும் பயிற்சிகள், சமுதாயம் சார்ந்த பணிகளில் பங்கு பெறுதல் ஆகிய நடவடிக்கைகள் தொகுத்து மணிமேகலை விருது பெற சமுதாய அமைப்புகள் விண்ணப்பிக்கலாம்.

மணிமேகலை விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கும் தகுதியான சமுதாய அமைப்புகள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த வட்டார இயக்க மேலாளரிடம் மற்றும் நகர்புற சமுதாய அமைப்புகள் சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி சமுதாய அமைப்பாளர்களை தொடர்பு கொண்டு படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து வருகின்ற 5-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com