தாட்கோ திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்

தாட்கோ திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று அரியலூர் கலெக்டர் கூறியுள்ளார்.
தாட்கோ திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்
Published on

அரியலூர்,

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களுக்காக செயல்படுத்தப்படும் கீழ்கண்ட பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு தகுதியும், விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அதன்படி, நிலம் வாங்கும் திட்டம், நிலம் மேம்பாடு திட்டம், துரித மின் இணைப்பு திட்டம், தொழில் முனைவோர் திட்டம், பெட்ரோல், டீசல் எரிவாயு சில்லரை விற்பனை நிலையம் அமைத்தல், தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்புத்திட்டம், மருத்துவ மையம், மருந்தியல், கண் கண்ணாடியகம், முடநீக்குமையம், ரத்த பரிசோதனை நிலையம் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல், சுய உதவிக் குழுக்களுக்கான சுழல்நிதி, மாவட்ட கலெக்டர் விருப்புரிமை நிதி, தமிழ்நாடு தேர்வாணைய தொகுதி-1 முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நிதியுதவி உள்பட பல்வேறு திட்டங்களின் கீழ் பயன்பெறலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் வயது வரம்பு 18 முதல் 65 வரை இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.1 லட்சம் ஆகும்.

விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர் தங்களது பற்றிய முழு விவரங்கள், புகைப்படம், இருப்பிடச்சான்றிதழ், சாதி சான்றிதழ் (எண், வழங்கப்பட்ட நாள், வழங்கியவர் மற்றும் வழங்கப்பட்ட அலுவலகம்), குடும்ப வருமான சான்றிதழ் (எண். வழங்கப்பட்ட நாள், வழங்கப்படுவதற்கான காரணம், நேர்காணல் நடத்தப்படும் தேதிக்கு 1 ஆண்டுகள் முன்பு வரை வருமானச்சான்று பெற்றிருக்கலாம்), குடும்ப அட்டை எண், ஆதார் எண், விண்ணப்பதாரர் தொலைபேசி, கைபேசி எண், விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரி, திட்டங்களின் விவரங்கள் இணையதளத்தில் கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும். தொலைபேசி, கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி இல்லாதவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும். மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் தவிர திட்டங்களுக்கு ஏற்றாற்போல் தேவைப்படும் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்கண்ட ஆவணங்களை https://ap-p-l-i-c-at-i-on.tah-d-co.com என்ற தாட்கோ இணையதளத்தில் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவும். மேலும், இணையதளம் மூலம் விண்ணப்பிக்க உதவி தேவைப்படுபவர்களுக்கு அரியலூர் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் ரூ.60-ஐ செலுத்தி விண்ணப்பிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com