நாகையில் ராணுவத்துக்கு 2-வது நாளாக ஆள்சேர்ப்பு முகாம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்பு

நாகையில் ராணுவத்துக்கு 2-வது நாளாக ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
நாகையில் ராணுவத்துக்கு 2-வது நாளாக ஆள்சேர்ப்பு முகாம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்பு
Published on

நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட விளையாட்டரங்கில் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் நேற்று முன்தினம் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களும், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களும் கலந்து கொள்ளலாம்.

அதன்படி நேற்று 2-வது நாளாக புதுக்கோட்டை, காரைக்கால், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கான தேர்வு முகாம் நடந்தது. இதற்காக அந்த மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் நேற்று முன்தினம் இரவு முதலே நாகைக்கு வந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் படுத்து தூங்கினர்.

மருத்துவ பரிசோதனை

இதைத்தொடர்ந்து அதிகாலையில் அவர்கள் முகாம் நடக்கும் மாவட்ட விளையாட்டரங்கத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்களுக்கு கைரேகை பதிவு செய்யப்பட்டு, உயரம், எடை சரிபார்க்கப்பட்டது. இதையடுத்து தேர்வு செய்யப்பட்டவர்களிடம் இருந்து சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com