கடனுக்கு பெட்ரோல் கொடுக்காததால் ஊழியர்கள் மீது தாக்குதல் 3 பேருக்கு வலைவீச்சு

கபிஸ்தலம் அருகே கடனுக்கு பெட்ரோல் தர மறுத்ததால் பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர்களை தாக்கிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கடனுக்கு பெட்ரோல் கொடுக்காததால் ஊழியர்கள் மீது தாக்குதல் 3 பேருக்கு வலைவீச்சு
Published on

கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் பவுண்டு பகுதியில் ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. இந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தில் கீழமாஞ்சேரி புதுதெருவை சேர்ந்த மணிகண்டன் (வயது25), சதாசிவன் மகன் மகாதேவன்(26) ஆகிய இருவரும் பணியாற்றி வருகிறார்கள். சம்பவத்தன்று நள்ளிரவு கபிஸ்தலம் ஒத்த தெருவை சேர்ந்த மணிகண்டன், எட்வின், சர்மா, ஆகிய 3 பேரும்

தங்களது மோட்டார் சைக்கிளுக்கு கடனுக்கு பெட்ரோல் நிரப்பும்படி கேட்டனர். இதற்கு ஊழியர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

வழக்குப்பதிவு

இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், எட்வின், சர்மா ஆகிய 3 பேரும் சேர்ந்து அருகில் இருந்த வாலி மற்றும் உருட்டுக்கட்டையால் பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர்கள் மணிகண்டன், மகாதேவனை தாக்கினர். தாக்குதலில் படுகாயமடைந்த மணிகண்டன், மகாதேவன் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், எட்வின், சர்மா ஆகிய 3 பேரை தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com