வெவ்வேறு விபத்துகளில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் சாவு

வெவ்வேறு விபத்துகளில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
வெவ்வேறு விபத்துகளில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் சாவு
Published on

பெங்களுரு:

2 பேர் பலி

ஹாவேரி டவுன் பசவேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்தவர்கள் விஜய் கவலகுடே(வயது 38). கணேஷ் ரடகல்(38). நண்பர்களான இவர்கள் 2 பேரும் இரும்பு வியாபாரிகள் ஆவார்கள். இந்த நிலையில் ஹாவேரி புறநகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட விஜயும், கணேசும் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர். ஹாவேரி-ஹனகல் சாலையில் வந்தபோது அந்த வழியாக வேகமாக வந்த டிராக்டர், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

கல்லூரி மாணவர்

பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா தாலுகா தொட்டபெலவங்கலா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அம்பலகெரே கிராமத்தை சேர்ந்தவர் வருண்(18). கல்லூரி மாணவரான இவர் நேற்று காலை தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் தொட்டப்பள்ளாப்புரா நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் வருண் இறந்தார். அவரது தந்தை காயம் அடைந்தார். இந்த விபத்துகள் குறித்து ஹாவேரி புறநகர், தொட்டபெலவங்கலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com