பண்ணை பசுமை நடமாடும் கடை மூலம் தலைமைச் செயலகத்தில் வெங்காயம் விற்பனை

பண்ணை பசுமை நடமாடும் கடை மூலம் தலைமைச் செயலகத்தில் வெங்காயம் விற்பனை போட்டிபோட்டு வாங்கிச் சென்றனர்.
பண்ணை பசுமை நடமாடும் கடை மூலம் தலைமைச் செயலகத்தில் வெங்காயம் விற்பனை
Published on

சென்னை,

தமிழகம் முழுவதும் வெங்காய தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் வெங்காயத்தின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது. எனவே, மக்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் கிடைப்பதற்காக பண்ணை பசுமை கடைகள் மூலம் குறைந்த விலையில் வெங்காயத்தை தமிழக அரசு விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், தலைமைச் செயலக ஊழியர்கள், அங்குள்ள காவலர்கள் உள்ளிட்டவர்களுக்காக பண்ணை பசுமை நடமாடும் ஊர்தி (வேன்) மூலம் நேற்று வெங்காயம் ஒரு கிலோ ரூ.50 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.

ஒரு பாக்கெட்டில் 2 கிலோ வெங்காயம் போடப்பட்டு ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. உதிரியாகவும் வெங்காயத்தை பலர் வாங்கிச் சென்றனர். பெண் ஊழியர்கள் போட்டிப்போட்டு வெங்காயத்தை வாங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 1 மணி நேரத்தில் வெங்காயம் விற்று முடிந்துவிட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com