திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் தொழிலாளர் தின விழா

திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஜனதா தள தொழிலாளர் சம்மேளன சார்பில் தொழிலாளர் தின விழா கொண்டாடப்பட்டது.
திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் தொழிலாளர் தின விழா
Published on

திருமங்கலம்,

திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவத் துறை ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பாக தொழிலாளர்கள் தினவிழா நடைபெற்றது. மாநில துணை தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார். கிளை துணை தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். செயலாளர் விஜயகுமார் வரவேற்றார். பொருளாளர் பாலு சங்க கொடியை ஏற்றி வைத்து பேசினார்.

இதில் மாநில தலைவர் திருவாசகம் சிறப்புரையாற்றினார். டாக்டர் ராம்குமார் தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் நிர்வாகிகள் முருகேசன், பெர்கமான்ஸ் குணசேகரன் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

இதேபோல ஜனதாதள தொழிலாளர் சம்மேளன அலுவலகத்தில் தொழிலாளர் தின விழா கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து அமைப்பின் மாநில ஊடகச் செயலாளர் ச.சசாங்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உலக சமூகத்திற்கு தன்னலம் பாராமல் உணவளிக்க நாளும் உழைத்துக் கொண்டிருக்கும் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் உலகத்தின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு நொடியும் உழைத்துக் கொண்டு இருக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் மே நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இந்த நந்நாளிலிருந்து வறுமை, வேலையில்லா திண்டாட்டம் ஒழிந்து, குறைந்தபட்ச ஊதியம் மற்றும் அனைவருக்கும் ஓய்வு ஊதியம் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. சாதி மத வேறுபாடுகள் நீங்கி அனைவரும் ஒன்றே குலம் என்னும் ஆன்மநேய ஒருமைப்பாட்டை கடைபிடித்து ஒற்றுமை உணர்வுடன் வாழ இந்நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்றுக்கொள்ள வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம், தேசிய நீர்வழிச்சாலை அமைத்து வறட்சியை போக்கி, நீர்வளத்தை சேமித்து மக்கள் நலனை காக்கும் வகையில் அரசும், அதிகாரிகளும் செயல்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

பாலமேட்டில் ஒருங்கிணைந்த ஆட்டோ ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் நலச்சங்கத்தின் சார்பில் தொழிலாளர் தின விழா நடந்தது. இதையொட்டி பொதுமக்களுக்கு நீர், மோர், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு மகாலிங்கசாமி மடத்து கமிட்டி தலைவர் செல்லத்துரை, செயலாளர் கார்த்திகைராஜன், பொருளார் சுப்புராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். பேரூராட்சி முன்னாள் துணை சேர்மன் பாலசுப்பிரமணியன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரசோலை முன்னிலை வகித்தனர். ஆட்டோ சங்க தலைவர் பூபதி, செயலாளர் குணசேகர், பொருளாளர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் உள்பட ஆட்டோ ஓட்டுனர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னாள் கவுன்சிலர் செல்வம் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com