

திருப்பூர்,
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் லோகநாயகி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராணி கோரிக்கை குறித்து பேசினார். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். கர்ப்பிணி பதிவில் பார்வையாளர் இலக்கை நீக்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கிராம சுகாதார செவிலியர்களுக்கு உடனடியாக இடமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.