

திருவள்ளூர்,
இந்த நிலையில் நேற்று மாலை திடீரென திருவள்ளூர், ஈக்காடு, மணவாளநகர், வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை, திருப்பாச்சூர், பிரயாங்குப்பம், கடம்பத்தூர், சத்தரை, பேரம்பாக்கம், கூவம், குமாரச்சேரி, இருளஞ்சேரி, சிற்றம்பாக்கம், களாம்பாக்கம், சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
ஊத்துக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை ஒன்றரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. கழிவுநீர் கால்வாய்களில் ஆங்காங்கே குப்பைகள், முள்செடிகள் சிக்கிக்கொண்டன. இதனால் மழை நீர் பாயாத நிலை ஏற்பட்டது. பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளின் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றினர். பின்னர் மழைநீர் தங்கு தடையின்றி பாய்ந்தது. தாழ்வான பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். தாராட்சி, பாலவாக்கம், சூலைமேனி, சீதஞ்சேரி, சுருட்டப்பள்ளி, காரணி, தாசுகுப்பம், நரசா ரெட்டி கண்டிகை, புதுகுப்பம் போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பலத்த மழைக்கு மின்சாரம் தடை செய்யப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளனார்கள்.