நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் - திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் கோரிக்கை

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் - திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் கோரிக்கை
Published on

திருப்பூர்,

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நூல் விலை இந்த மாதத்தில் ஒரு கிலோவிற்கு ரூ.20 வரை உயர்ந்துள்ளது. ஏற்கனவே ஜி.எஸ்.டி.யால் ஏற்பட்டுள்ள பாதிப்பில் இருந்து இன்னமும் மீண்டு வர முடியவில்லை. கடந்த அக்டோபர் 2017-ல் இருந்து, மார்ச் 2018 வரை மாதந்தோறும் ஏற்றுமதி வளர்ச்சியானது தொடர்ந்து சரிவை சந்தித்து வந்து கொண்டிருக்கிறது.

நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் தொடர்வதுடன் 34 சதவீதம் ஏற்றுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும், இந்த 6 மாதங்களில் சராசரி ஏற்றுமதி வளர்ச்சியானது 21 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. இதனால் தொழில்துறையினர் கடும் பாதிப்பை சந்தித்து வந்து கொண்டிருக்கின்றனர்.

அடிக்கடி நூல் விலை உயர்ந்து வருவதால் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. இது தொடர்பாக ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் மத்திய ஜவுளித்துறை மந்திரி ஸ்மிருதி இராணியை சந்தித்து நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சக தலைமை செயலாளர் பனீந்தர் ரெட்டியையும் சந்தித்து பருத்தி விலை உயர்வு, பருத்தி கழகத்தின் தவறான கொள்கைகள் குறித்து விளக்கப்பட்டது. அப்போது அவர் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாயிலாக, மத்திய அரசுக்கு தெரிவித்து நூல் விலையை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com