பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய, உறவினர் வீட்டில் 50 பவுன் நகையை திருடிய சிறுவன் உள்பட 4 பேர் கைது

பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய உறவினர் வீட்டில் 50 பவுன் நகைகள் திருடிவிட்டு மும்பை வந்த சிறுவன் மீட்கப்பட்டுள்ளான். அவனை தவறு செய்ய தூண்டிய பார் அழகி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய, உறவினர் வீட்டில் 50 பவுன் நகையை திருடிய சிறுவன் உள்பட 4 பேர் கைது
Published on

மும்பை,

நாக்பூரை சேர்ந்த 14 வயது சிறுவன் தனது மாமா வீட்டில் வசித்து வந்தான். இவன் சமீபத்தில் மும்பையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளான். அப்போது அவனுக்கு டான்ஸ் பார் அழகி ரிகானா என்பவரின் அறிமுகம் கிடைத்து உள்ளது. அப்போது, அவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்தால் டான்ஸ் பாரில் நடனமாடி அதிக பணம் சம்பாதித்து உல்லாச வாழ்க்கை வாழலாம் என சிறுவனிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளா.

இதை நம்பிய சிறுவன் தனது மாமா வீட்டில் இருந்து 50 பவுன் தங்க நகைகளை திருடிவிட்டு மும்பை வந்தான். மேலும் அதை விற்று பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சிறுவனின் மாமா நாக்பூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மும்பையில் சிறுவனை மீட்டனர். மேலும் அவனை பாலினமாற்று அறுவை சிகிச்சை செய்ய, நகைகள் திருட தூண்டிய பார் அழகி ரிகானா, அவரது கூட்டாளிகள் இம்ரான், பரூக் சேக், பிரசாந்த் ஆகியோரை கைது செய்தனர்.

போலீசார் அவர்களிடம் இருந்து தங்க நகைகள், மோட்டார் சைக்கிள், 3 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com