தேசிய தர உறுதித்திட்டத்தில் தேர்வு: எடப்பாடி பழனிசாமியிடம் மருத்துவ அதிகாரிகள் வாழ்த்து

தேசிய தரச்சான்றிதழ் மற்றும் பரிசு தொகைக்கான காசோலைகளை, மருத்துவ அதிகாரிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தலைமை செயலகத்தில் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
தேசிய தர உறுதித்திட்டத்தில் தேர்வு: எடப்பாடி பழனிசாமியிடம் மருத்துவ அதிகாரிகள் வாழ்த்து
Published on

சென்னை,

குடும்ப நலத்துறையின் தேசிய தர உறுதித்திட்டத்தில் 2018-19-ம் ஆண்டுக்கு கடலூர் மற்றும் நாமக்கல் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக வழங்கப்பட்ட தேசிய தரச்சான்றிதழ் மற்றும் பரிசு தொகைக்கான காசோலைகளை கடலூர் மற்றும் நாமக்கல் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தலைமை செயலகத்தில் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

இதேபோல ஆவட்டி, பெல்ராம்பட்டி, கொடும்பலூர், மறைமலைநகர், பாலமேடு, சோராஞ்சேரி, தும்பல்பட்டி, வி.காலியாபுரம், எடுத்தவாய்நத்தம் மற்றும் கண்டமங்கலம் ஆகிய 10 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேர்ந்தெடுத்ததற்காக வழங்கப்பட்ட தேசிய தரச்சான்றிதழ்கள் மற்றும் பரிசு தொகைக்கான காசோலைகளை கடலூர், தர்மபுரி, புதுக்கோட்டை, செங்கல்பட்டு, மதுரை, பூந்தமல்லி, சேலம், கோவை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் சுகாதார மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர்களும் எடப்பாடி பழனிசாமியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

இந்த நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க.சண்முகம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com