பருவ மழையை எதிர்கொள்ள 3 மாதத்திற்கு தேவையான ரேஷன் பொருட்கள் கையிருப்பில் உள்ளது - அமைச்சர் காமராஜ் தகவல்

பருவ மழையை எதிர்கொள்ள 3 மாதத்திற்கு தேவையான ரேஷன் பொருட்கள் கையிருப்பில் உள்ளது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
பருவ மழையை எதிர்கொள்ள 3 மாதத்திற்கு தேவையான ரேஷன் பொருட்கள் கையிருப்பில் உள்ளது - அமைச்சர் காமராஜ் தகவல்
Published on

நன்னிலம்,

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பாரதிதாசன் உறுப்பு கலைக்கல்லூரி உள்ளது. இதில் 1500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நன்னிலம் அருகே உள்ள மூலமங்கலத்தில் ரூ.3 கோடியே 34 லட்சத்தில் பிற்படுத்தப்பட்ட மாணவிகள் தங்கும் விடுதி கட்டிடம் கட்டுவதற்கு

அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் காமராஜ் கலந்துகொண்டு தங்கும் விடுதி கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. கொரோனா தொற்றில் இருந்து தமிழக மக்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டு திறம்பட செயலாற்றி வருகிறது.

தற்போது கட்டப்பட உள்ள தங்கும் விடுதி கட்டிடம் மூன்று தளங்களை கொண்டது. மாணவிகள் தங்கும் அறைகள், நவீன உணவு கூடம், சமையலறை அனைத்து வசதிகளுடன் கூடிய கழிவறை மற்றும் குளியல் அறைகளும் கட்டப்பட உள்ளன. இதை பயன்படுத்தி மாணவிகள் கல்வி தரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் ஒன்றியக்குழு தலைவர் விஜயலட்சுமி, குணசேகரன், ஒன்றிய செயலாளர்கள் ராம குணசேகரன், அன்பழகன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மோகனசுந்தரம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பூஷணகுமார், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சம்பத், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. பருவ மழையை எதிர் கொள்ள 3 மாதத்திற்கு தேவையான ரேஷன் பொருட்கள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்படாமல் இருக்க தாழ்வான பகுதிகள் கண்டறியபட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com