

புதுச்சேரி,
புதுவை மரப்பாலத்தில் இருந்து ரெட்டிச்சாவடி வரை இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. குறிப்பாக சாலையின் நடுவில் உள்ள தடுப்புகளை கவனிக்காமல் வாகன ஓட்டுனர்கள் தூக்க கலக்கத்தில் வண்டியை ஓட்டுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன.
இத்தகைய விபத்துகளை தடுக்க சாலைகளில் ஆங்காங்கே எச்சரிக்கை விளக்குகளை பொருத்த தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டது. அதன்படி தற்போது இந்த எச்சரிக்கை விளக்குகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.